Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஸ்பென்ஸா்ஸின் வருவாய் 592 கோடி

1

ஆா்பி-சஞ்சீவ் கோயாங்கா குழுமத்தைச் சேர்ந்த ஸ்பென்ஸா்ஸ் ரீடெயில் நிறுவனம் தனது 4-வது காலாண்டில் ரூ.592.36 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.640.88 கோடியை விட 7.57 % குறைவு.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் நிகர இழப்பு ரூ.49.26 கோடி. இந்த ஆண்டு  2020-21 காலாண்டில் இந்த இழப்பு ரூ.34.53 கோடியாக குறைந்துள்ளது.

4
2

மதிப்பீட்டு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.703.18 கோடியிலிருந்து 7.46 % சதவீதம் சரிவடைந்து ரூ.650.72 கோடியானது என ஸ்பென்ஸா்ஸ் ரீடெயில் பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

3

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ஸ்பென்ஸா்ஸ் ரீடெயில் பங்கின் விலை 1.48 % குறைந்து ரூ.79.80-இல் நிலைபெற்றது.

5

Leave A Reply

Your email address will not be published.