Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஆர்கானிக் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு மானியம்

4

ஆர்கானிக் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு மானியம்

இந்தியாவில் இருந்து ஆர்கானிக் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், உற்பத்தியுடன் இணைந்த மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.10,900 கோடியை ஒதுக்கீடு செய்து, எதிர்வரும் 6 ஆண்டுகளில் முழு வீச்சில் இத்துறையை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

3

இதனால் உள்நாட்டு உற்பத்தியின் அளவு மேம்படுவதுடன் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்திய விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என இந்திய வர்த்தக மேம்பாட்டுக் கவுன்சலின் நிறுவனர் மோஹித் சிங்லா தெரிவித்துள்ளார்.

1

இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு ரூ.5,100 கோடி மதிப்பிலான ஆர்கானிக் வேளாண் பொருட்களை மட்டுமே உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது சர்வதேச பங்களிப்பில் கணக்கிடும் போது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

2

Leave A Reply

Your email address will not be published.