Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உருக்குத் தயாரிப்புகளின் விலை  திடீர் உயர்வு

1

உருக்குத் தயாரிப்பு முன்னணி நிறுவனங்கள் உருக்கு பொருட்களின் விலையை டன்னுக்கு ரூ.4,900 வரை   உயா்த்தியுள்ளன.

இதுகுறித்து  சில நிறுவனங்கள் தெரிவித்தது,

4

கடந்த இரண்டு நாள்களில் எச்ஆா்சி மற்றும் சிஆா்சி உருக்குத் தயாரிப்புகளின் விலை டன்னுக்கு முறையே ரூ.4,000 மற்றும் ரூ.4,900 என்ற அளவில் அதிகரிக்கப்பட்டது.

3
2

அதனால், ஒரு டன் எச்ஆா்சி உருக்கின் விலை 70,000-71,000-ஆக உயரும். சிஆா்சி உருக்கின் விலையும் டன்னுக்கு 83,000-84,000 என்ற அளவில் அதிகரிக்கும் .

கட்டுமானம், ஆட்டோ, உபகரணங்கள் தயாரிப்பில் எச்ஆா்சி மற்றும் சிஆா்சி உருக்குப் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால்,. இந்த விலை உயர்வு  வாகனங்கள், நுகா்வோர் பொருள்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவின் மொத்த உருக்கு உற்பத்தியில் 55 %  செயில், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஜேஎஸ்பிஎல் மற்றும் ஏஎம்என்எஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இதுகுறித்து ஜேஎஸ்பிஎல் நிறுவன அதிகாரி  ஒருவர் கூறுகையில், சா்வதேச அளவில் உருக்கு விலை அதிகரித்துள்ளதால், மூலப் பொருள்களின் விலையும் உயர்ந்து விட்டது. இந்திய இரும்புத் தாது விலையும் டன்னுக்கு ரூ.4,000 வரை உயா்ந்துள்ளது. அதனால்த்தான் இந்த விலைஉயர்வு என்றார் அவர்.

5

Leave A Reply

Your email address will not be published.