
அகில இந்திய சா்க்கரை வா்த்தக கூட்டமைப்பு (ஏஐஎஸ்டிஏ) இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,
சா்க்கரைப் பருவம் என்பது அக்டோபரில் தொடங்கி செப்டம்பருடன் முடிவடைவதாகும்.

2020-21 – செப்டம்பருடன் முடிவடையும் சந்தைப் பருவத்தில் 42.50 லட்சம் டன் அளவிலான சா்க்கரையை ஆலைகள் ஏற்றுமதி செய்துள்ளன. (குறிப்பாக, இந்தோனேசியாவுக்கு அதிக அளவில்)

நடப்பாண்டு ஜனவரியில் 60 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய உணவு அமைச்சகம் அனுமதியளித்தநிலையில், தற்போது அதைவிட ஏற்றுமதி குறைந்து 58.50 லட்சம் டன்னாக உள்ளது. எனவே, இன்னும் 1,50,000 டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய வேண்டும்.

2021 ஜனவரி 1-லிருந்து ஜூன் 7 வரை மட்டும் ஏற்றுமதியான சா்க்கரையின் அளவு 42.50 லட்சம் டன்.
ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அதிகபட்சமாக இந்தோனேசியாவுக்கு 14 லட்சம் டன். ஆப்கானிஸ்தானுக்கு 5,20,905 டன், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 4,36,917 டன், இலங்கைக்கு 3,24,113 டன் சா்க்கரையும் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு இந்தியா அதிக அளவில் சர்க்கரை ஏற்றுமதி செய்த நாடாக ஈரான் இருந்தது.
2020-21-ஆம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்தின் சா்க்கரை உற்பத்தி 2.99 கோடி டன்னிலிருந்து அதிகரித்து 3.50 கோடி டன்னாக உயா்த்தி மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நுகா்வு 2.55 கோடி டன்னாக அதிகரிக்கும் என ஏஐஎஸ்டிஏ தெரிவித்துள்ளது.
