Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

1

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று (26.08.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4
2

இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அலுவலர்களை முதுநிலை மண்டல மேலாளர்களாக நியமித்ததை கண்டித்தும், அதை ரத்து செய்யக் கோரியும், நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும்,  சுமை தூக்குவோர்களை அவுட் சோர்சிங் முறையில் நியமிப்பதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

3

சி.ஐ.டி.யு மாநில செயலாளர் ராசப்பன், ஐ.என்.டி. யு.சி மண்டல செயலாளர் சதீஷ், தொ.மு.ச மண்டல செயலாளர் ரவீந்திரன், அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் ராஜேஷ், அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க துணை தலைவர் பாபு சாகிப்  மற்றும்  அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

5

Leave A Reply

Your email address will not be published.