Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் கோவில் அம்மன் தாலி திருட்டு!

1

திருச்சியில் கோவில் அம்மன் தாலி திருட்டு!

திருவானைக்காவல் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம்போல் பூசாரி கோவிலை திறந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வந்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தாலியை காணவில்லை.

4
2

உடனடியாக இது குறித்து கோவில் முறைதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

3

சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்மநபர் கோவிலின் பின்பகுதி வழியாக ஏறி குதித்து வந்து அம்மன் கழுத்தில் உள்ள தங்கதாலியை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கோவில் கருவறையில் இருந்த பீரோவை திறக்க முடியாததால் அதில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் தப்பியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை வரை தேடி வருகின்றனர்.

5

Leave A Reply

Your email address will not be published.