Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உங்கள் பணத்தினை முதலீடு செய்ய சிறந்த வழிகள்..

1

இரண்டு வகையான முதலீடுகள் உள்ளன. ஒன்று நிதி வகையில் செய்யும் முதலீடு, மற்றொன்று நிதி அல்லாத முதலீடு. நிதி முதலீடு என்பது பங்குகள், மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்கள், நிதி அல்லாத முதலீடு என்பது தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட், இதிலே நிதி முதலீடுகளில் நிலையான வருமானம் தரக்கூடிய முதலீடுகளும் உண்டு. அது பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் வங்கி வைப்பு நிதி ஆகும்

இதில் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்வது. இதில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம். ஏற்றத் தாழ்வுகள் அதிகம்.

4
2

ஆனால் இதற்கு எந்த உத்தரவாதம் இல்லை. இதில் உள்ள ரிஸ்க் என்னவென்றால் எந்த பங்குகளை தேர்தெடுப்பது தான். எனினும் இதில் நீண்ட கால நோக்கில் வருமானம் அதிகம். அதே சமயம் நஷ்டமும் அதிகம்.

3

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் இதே ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் முக்கியமாக ஈக்விட்டிகளில் முதலீடு செய்கின்றன. இவை பெரும்பாலும் தீவிரமாக வர்த்தகம் செய்யப்படும் பங்குகளில் முதலீடு செய்யப்படுகின்றது. இதன் வருமானம் பெரும்பாலும் வருவாய் ஈட்டும் நிதி மேலாளரின் திறனைப் பொறுத்தது.

நிலையான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகள் பொருத்தமானவை. அவை ரிஸ்குகள் குறைவானவை. பங்குகளுடன் ஒப்பிடும் போது குறைவான ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன.  இது கார்ப்பரேட் பத்திரங்கள், அரசாங்க பத்திரங்கள், கருவூல பில்கள், வணிக பில்கள் போன்ற ரிஸ்க் குறைவான வருமானம் உள்ள திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

5

Leave A Reply

Your email address will not be published.