Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர கொலை!

4

திருச்சியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர கொலை!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் விராலிமலை அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில்  பணிபுரிந்து வந்தார்.

இவர் மண்ணச்சநல்லூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி வந்து  மன்னார்புரம் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து நிறுவன பேருந்தில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

1

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற இவர் இரவு வரை  வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த பாஸ்கரின் பெற்றோர் தொலைபேசியில் தொடர்பு செய்ய முயற்சித்தனர்.  ஆனால் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து  வேலை புரியும் நிறுவனத்தில் கேட்டபோது, பாஸ்கர் புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

3

இதுகுறித்து, உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே நேற்று காலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  ராணுவ மைதான தளம் அருகே சாலையோரம் ஏராளமாக ரத்தக்கறை படிந்து காணப்பட்டதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட  போது அங்கு பாஸ்கர் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகிலேயே ரத்தம் படிந்த மரக்கட்டை ஒன்றும், பாஸ்கரின் தலை கல்லில் மோதப்பட்டதற்கான அடையாளமும், அருகில் பெண்கள் அணியும் செருப்பும் தென்பட்டது.

பாஸ்கர்  கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? பெண்கள் தொடர்பான பிரச்சினையா என்று போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நள்ளிரவில் அரங்கேறிய இக்கொடூர கொலை சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2

Leave A Reply

Your email address will not be published.