Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்!

1

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்!

திருச்சி மாநகர் பகுதி முழுவதும் சாலைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

4
2

மேலும் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை விரைவுபடுத்தி சாலைகளை செப்பனிட்டு வாகன ஓட்டிகளின் குறைக்க வேண்டும்.

3

மேலும் சாலைகளில் திரியும் மாடுகள், பன்றிகள், தெரு நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமாக உள்ளது. விபத்து ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று (22/08/2022) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5

Leave A Reply

Your email address will not be published.