
கடன் பிரச்னைகளால்கடந்த, இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும், ‘ஜெட் ஏர்வேஸ்’ பிரச்னை, ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கிக்கு, 8 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டி இருந்த நிலையில், நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.


ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தை ஏற்று நடத்துவதற்கான, ‘ஜலான் கல்ராக்’ கூட்டமைப்பின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது, என்.சி.எல்.டி., எனும், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம்.
90 நாட்களுக்குள் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமானங்களை நிறுத்துமிடம் குறித்த முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
