
திருச்சியில் வெப்பத்தை தணிக்கும்படி கொட்டி தீர்த்த மழை!

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று ஸ்ரீரங்கம், பொன்மலை, கே.கே நகர், எடமலைப்பட்டி புதூர், ஏர்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு திடீரென இடியுடன் கூடிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.

திடீர் மழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். ஆங்காங்கே மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இருப்பினும் வெப்பத்தை தணிக்கும்படி குளிர்ந்த காற்றுடன் மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
