
தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்வா வங்கிக்கு, 789 கிளைகள், 1,639 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன.

கடந்த நிதியாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த ‘டிபாசிட்’ 68 ஆயிரத்து 676 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அளிக்கப்பட்ட கடன், 58 ஆயிரத்து 86 கோடி ரூபாயாக உள்ளது. ஒட்டுமொத்த வர்த்தகம், 1 லட்சத்து 26ஆயிரத்து 762 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வங்கியின் வரலாற்றில் முதன் முறையாக, கடந்த நிதியாண்டு மொத்த வர்த்தகம், 1.25 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. மேலும் வங்கி ஊழியர்களின் உழைப்பு, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, ஆதரவு ஆகியவற்றால்த்தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது என இதன் நிர்வாக இயக்குனர் ரமேஷ் பாபு கூறினார்.
