
திருச்சி அருகே நள்ளிரவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!
உப்பிலிபுரம் வைரசெட்டி பாளையத்தை அடுத்துள்ள ஏலகிரி காடு பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன், இவரது சகோதரர் பாலா.


இவரது குடும்பத்தினர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் அடுத்தடுத்த பகுதிகளில் தங்கி வந்துள்ளனர். தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் கணேசன் மற்றும் பாலா குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஒரு பக்க மண்சுவர் இடிந்து விழுந்தது.
வீட்டின் சுவர் வெளிப்புறமாக இடிந்து விழுந்ததால் வீட்டில் தூங்கிய 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
