Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பணிக்குச் சென்றபோது பரிதாபமாக உயிரிழந்த இளம் காவலர்!

1

பணிக்குச் சென்றபோது பரிதாபமாக உயிரிழந்த இளம் காவலர்!

திருச்சி அருகே பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்  (28). இவர் வாத்தலை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.

4
2

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு செல்வதற்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். பெட்டவாய்த்தலை மில் கேட்டு அருகே திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென மயக்கம் வருவது போல உணர்ந்த ராமகிருஷ்ணன் சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். சிறிது நேரத்தில் அவர் அங்கேயே மயங்கினார்.

3

இதனைக்கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராமகிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இளம்வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.