
திருச்சியில் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!
திருச்சி காந்தி மார்க்கெட் மணிமண்டப சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் (36). இவர் அதே பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார்.


வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார் . நேற்று (28.08.2022) காலை கடை திறக்க வந்தபோது கடையை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ள சென்று பார்த்தபோது ரூ. 2000 பணம் மற்றும் 26 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்டது தெரிய வந்தது
இதயைடுத்து, காந்தி மார்க்கெட் போலிசில் ராஜேஷ் புகார் அளித்தார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
