Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நவீன சலவையகங்கள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!

1

நவீன சலவையகங்கள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்டோர் , மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் , மாறி வரும் சூழலுக்கு ஏற்பவும் , நவீன சலவையகங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

4

ஒரு நவீன முறை சலவையகம் அமைக்க சம்பந்தப்பட்ட உபகரணங்கள் வழங்க ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது .

3
2

இதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுதரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப் படும் . 10 நபர்களை  கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும் .

குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் . இத்திட்டத்தில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளோர் , இத்தொழிலில் முன் அனுபவமுள்ள திருச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் குழுவாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்

இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

5

Leave A Reply

Your email address will not be published.