
திருச்சியில் நாளை மக்களை தேடி மாநகராட்சி குறைதீர் முகாம்!

திருச்சி மாவட்டத்தில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாத கடைசியிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாத்திற்கான மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் 2- வது மண்டல பகுதிக்கு பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் நாளை (30.08.2022) நடைபெற உள்ளது .

இதில் 2 – வது மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 13 வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக இம்முகாமில் அளித்து பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார் .
