Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

 டொயோடாவின் புதிய அறிமுகம் “கூல் நியூ கிளான்சா கார்”

1

டொயோடா என்ஜினியர்களால் பிரத்தியேகமாக மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட  புதிய கூல் நியூ கிளான்சா கார் அறிமுக நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது..

வாடிக்கையாளர்களுக்கான வசதியை உறுதிசெய்யும் வகையில் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் 9-இன்ச் ஸ்மார்ட் பிளே காஸ்ட் போன்ற தொழில்நுட்பங்கள், ஸ்மார்ட்போன் (ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு) வழியாக காரை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதத்துடன் சக்திவாய்ந்த ‘கே-மாடல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

4

இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆகிய 2 வித மாடல்களில் வெளிவருகிறது. இதன் என்ஜின் 1197 சிசி திறன் கொண்டதாகும். மேலும் இதன் 66 கிலோ வாட் ஆற்றல் வெளியீடு சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. 6 ஏர்பேக்குகள், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் மலை ஏறும்போது மிகுந்த கவனத்துடன் ஏறுவதற்கான கட்டுப்பாட்டு வசதி, 16-இன்ச் மெல்லிய அலாய் வீல்கள், எல்இடி புரொஜெக்டர் முன்புற விளக்குகள் மற்றும் பனி காலத்தில் பயன்படுத்தும் வகையிலான எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

3
2

டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வசதி, பட்டன் மூலம் காரை ஸ்டார்ட் செய்யும் வசதி, 9 இன்ச் புதிய ஸ்மார்ட் பிளேகாஸ்ட், அல்ட்ரா வைலட் பாதுகாப்பு கண்ணாடி, பின்புற இருக்கைக்கான யூஎஸ்பி வசதி மற்றும் ஆட்டோ ஏசி வசதி உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்து அற்புதமான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

இந்த காருக்கு 3 வருடம் அல்லது 1 லட்சம் கி.மீ. வரை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் 5 ஆண்டுகள்

டொயோடா க்ளான்சா இ ஆட்டோமேட்டிக் ரூ.6,39,000க்கும், க்ளான்சா எஸ் மேனுவல் 7,29,000க்கும் ஆட்டோமேட்டிக் ரூ.7,79,000க்கும், க்ளான்சா ஜிமேனுவல் 8,24,000க்கும், ஆட்டோமேட்டிக் ரூ.8,74,000க்கும், க்ளான்சா வி மேனுவல் 9,19,000க்கும், ஆட்டோமேட்டிக் ரூ9,69,000க்கும் கிடைக்கும், என்று டொயோடா அறிவித்துள்ளது.

 

5

Leave A Reply

Your email address will not be published.