Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி கலையரங்கத்தில் வெட்டப்பட்ட மரங்கள்! நடவடிக்கை எடுத்த கலெக்டர்!

1

திருச்சி கலையரங்கத்தில் வெட்டப்பட்ட மரங்கள்! நடவடிக்கை எடுத்த கலெக்டர்!

 

முன்னாள் அமைச்சரும் தற்போது அதிமுக எடப்பாடி அணியின் முக்கிய நிர்வாகி சிவபதி இல்லத் திருமண விழா வரும் 29-ம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடக்கிறது . 28 ம் தேதி மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது .

4
2

இதற்காக திருமண வீட்டார் கலையரங்க வளாத்தை சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கினர். அதே நேரத்தில் அங்குள்ள மரங்களின் கிளைகள் அனைத்தையும் வெட்டப்பட்டது.  இந்த கலையரங்கம் மற்றும் அந்த வளாகம் கலெக்டர் தலைமையிலான மாவட்ட நலக்குழு சார்பில் பராமரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது .

3

இந்நிலையில், மரங்களை வெட்டியவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது .  இதுகுறித்து, தகவல் அறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலையரங்க வளாகத்தில் மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டுவதை நிறுத்த உத்தரவிட்டார்.

5

Leave A Reply

Your email address will not be published.