
திருச்சியில் ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் 9 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது..
திருச்சியில் சிறுதானிய உணவுகளுக்கு என தமிழகத்தின் முதல் முழுநேர சிறுதானிய உணவகமாக தொடங்கப்பட்டது ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகம். இதன் 9வது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஏ.ஒய்.ஐ.ஓ என்ற உணவே மருந்து என்ற இயற்கை உணவு தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் அமைப்பின் அறிமுக விழா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

ஆப்பிள் மில்லட் நிறுவன இயக்குநர் துரை.வீரசக்தி வரவேற்றுபேசினார்.

தொழிலதிபர் மனோசாலமன், மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் டாக்டர் வேணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட நடிகர் கலைமாமணி டெல்லிகணேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
உணவால் வெல்வோம் -உலகை ஆழ்வோம் என்ற தலைப்பில் டாக்டர் கு. சிவராமன் சிறப்புரை ஆற்றினார்..
விழாவையொட்டி நிறுவன பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.. நிகழ்ச்சியினை நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன் தொகுத்து வழங்கினார்.
