Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் மனு கொடுக்க வந்தவர் கலெக்டர் அலுவலக கண்ணாடியை உடைந்தால் பரபரப்பு!

4

திருச்சியில் மனு கொடுக்க வந்தவர் கலெக்டர் அலுவலக கண்ணாடியை உடைந்தால் பரபரப்பு!

திருச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்த நபர்  திடீரென நுழைவுவாயிலில் உள்ள கண்ணாடி மீது கற்களை வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

3

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்த மாடசாமி (வயது 30) என்பது தெரியவந்தது. பழைய பேப்பர்களை சேகரித்து விற்கும் தொழிலாளியான இவர் தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்கக்கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளார். ஆனால், சனிக்கிழமை என்பதால் அதிகாரிகள் யாரும் இல்லை.

1

இதனால், ஆத்திரம் அடைந்த அவர் கற்களை வீசி கண்ணாடியை உடைத்தாக போலீசாரிடம்  தெரிவித்தார்.  அவரை கைது செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2

Leave A Reply

Your email address will not be published.