
திருச்சி தொழிலதிபர் விபத்தில் பலி!
திருச்சி பெரிய கடைவீதி விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (50). நகைக் கடை உரிமையாளர். இவர் தனது நண்பர் பாலமுருகன் (27) என்பவருடன் நேற்று முன்தினம் பைக்கில் தஞ்சாவூர் சென்று விட்டு மாலை திருச்சிக்கு திரும்பியுள்ளார்.


இந்நிலையில், துவாக்குடி டோல்பிளாசா அருகில் வந்த போது பைக் கட்டுபாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளாது. இதனையடுத்து, சிகிச்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலமுருகன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
