Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

145 வருட பராம்பரியமிக்க திருச்சி மதுரம் மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு!

1

145 வருட பராம்பரியமிக்க திருச்சி மதுரம் மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு!

திருச்சி புத்தூர் குரு மருத்துவமனை சாலையில் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைந்துள்ளது மதுரம் மருத்துவமனை. 145 வருடங்களாக 5ம் தலைமுறையும் தொடர்ந்து மருத்துவசேவை தொடரும் இம்மருத்துவமனையில் ஏற்கனவே பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.

4

3

மகப்பேறு மருத்துவத்தில் பிரசித்தி பெற்ற இம்மருத்துவமனையில் அனைத்து பிரிவினருக்கும் தனித்தனியே சிறப்பு மருத்துவ வல்லுனநர்கள் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது கூடுதலாக NABH & ISO தரச்சான்றிதழுடன் கூடிய புதிய மேம்படுத்தப்பட்ட ICU பிரிவு, பல்சிகிச்சைக்கென தனிப்பிரிவு, மேலும், டயாலிசிஸ் சிகிச்கைக்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

2

50 கூடுதல் படுக்கை வசதிகள், 24 மணிநேரதீவிர, அவசரசிகிச்சைபிரிவு,  AC Labour (பிரசவ) suit, பாதபராமரிப்புமையம், X-RAY,  Scan, Ultra Scan, ECHO, Physiotherapy பிரிவுகள் மற்றும் 24 மணிநேர Pharmacy வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் சார்பில் திருச்சி கம்பரசம்பேட்டையில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. இதனை மேரி பாக்கியராணி பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஐவன் மதுரம் கூறுகையில், கம்பரசம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களின் நலனைக் கருதி தமிழன் நகரில் புதியதாக தொடங்கியுள்ளோம் என்றார்.

இவ்விழாவில், மதுரம் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். சர்மிளி மதுரம் உட்பட மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

5

Leave A Reply

Your email address will not be published.