Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நள்ளிரவில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை  மடிக்கி பிடித்து திருச்சி போலீஸ் அதிரடி!

3

நள்ளிரவில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை  விரட்டி பிடித்து திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருவானைக்காவலில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, ஓட்டல் வாசலில் நின்று  செல்போனில்  பேசிக்கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 3 பேர் அவரின் செல்போனை பறித்து சென்றனர்.

4

இதனையடுத்து, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

1

இச்சம்பவம் குறித்து, இரவு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் அதே கும்பல்  திருச்சி மத்திய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகே நடந்து சென்ற ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்றனர். சுதாரித்த அந்த நபர் உடனடியாக செல்போன் திருடர்களை பிடிக்க முயன்ற போது நிலைதடுமாறி பைக்கில் இருந்த 3 பேர் கீழே விழுந்தனர்.

இதனை கண்ட அப்பகுதியில்  ரோந்து பணியில் இருந்த போலீசார், உடனடியாக அவர்களை பிடிக்க சென்றனர். போலீசாரை கண்டு ஒருவர் தப்பியோடி விட்டார். மேலும் 2 நபர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.

பிடிபட்ட 2 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் ஏர்போர்ட் வசந்தநகரை சேர்ந்த நடராஜனின் மகன் அஜய்ராஜ்(20), காஜாநகரை சேர்ந்த விக்னேஸ்வரன்(22) என்பதும், தப்பி ஓடியவர் திருச்சி ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் வழிப்பறி சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

2

Leave A Reply

Your email address will not be published.