Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அஞ்சல் சேமிப்பு கணக்கு துவங்குவதில் இந்திய அளவில் திருச்சி முதலிடம்

1

அஞ்சல் சேமிப்பு கணக்கு துவங்குவதில் இந்திய அளவில் திருச்சி முதலிடம்

திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சுதந்திர தின விழாவில் 75 மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், 75 செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு அதற்கான புத்தகங்களை மத்திய மண்டலம் அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன் வழங்கினார்.

4
2

இதனையடுத்து, அவர் கூறியதாவது:  அஞ்சல் துறை சாமானிய மனிதர்களுக்காக ஆதார் செல்வமகள் சேமிப்பு, மக்கள் சேமிப்பு கணக்குகள் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவை ஆகியவற்றை வருகிறது.

3

2021- 22 ஆம் நிதி ஆண்டில் திருச்சி அஞ்சல் மண்டலத்தில் 12.25 இலட்சம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்ட இந்திய அளவில் முதலிடம் பெற்றது. இந்த ஆண்டு பெண்களுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகளுக்கான கணக்கு துவங்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் திருச்சி மண்டலத்தில் அனைத்து அஞ்சலங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் எங்கும் அஞ்சல் சேவை பெற முடியும் என்றார்.

5

Leave A Reply

Your email address will not be published.