Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பணத்தை இழந்த திருச்சி வாலிபர்!

1

கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பணத்தை இழந்த திருச்சி வாலிபர்!

திருச்சி மாவட்டம் லால்குடி கள்ளகம் பகுதி சேர்ந்தவர் பாலச்சந்திரன் (30). இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடிய போது பொருட்களை வாங்கினால் அதிக கமிஷன் தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதை கண்டுள்ளார்.

4

இதனை நம்பிய பாலச்சந்திரன் கடந்த 4-ம் தேதி முதல் ரூ. 300 செலுத்தி பொருளை வாங்கியுள்ளார் அதற்கு கமிஷனாக ரூ.30 பாலச்சந்திரனின் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது.

3
2

இதனையடுத்து இவர் ரூ. 10,000 மற்றும் ரூ.5000 என ஆயிரக்கணக்கில் செலவழித்து அதிக கமிஷன் கிடைக்கும் என நம்பி மொத்தமாக 9 லட்சத்து 89 ஆயிரத்து 511 ரூபாய் வரை பொருட்களை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் வாங்கப்பட்ட பொருட்களுக்கான கமிஷன் இணையத்தில் காட்டப்பட்டாலும், வங்கி கணக்கில் வந்து சேரவில்லை என்பதை அறிந்தபோதே அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

உடனடியாக இது குறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5

Leave A Reply

Your email address will not be published.