
பைக் மோகத்தால் உயிரை விட்ட திருச்சி வாலிபர்!
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கணபதி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன் (19). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார்.


இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பைக் வாங்கி தர சொல்லி தனது தாயிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக மகனின் ஆசையை நிறைவேற்ற இயலவில்லை.
பைக் கிடைக்காதல், மனஉளைச்சலில் இருந்த மணிகண்டன் நேற்று (22/08/2022) இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
