Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் 2வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

4

திருச்சியில் 2வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவை மொத்தமாக திருச்சி குட்ஷெட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.

3

தற்போது குட்செட்டில் 300க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகிறது. இந்த லாரிகள்  ரயில்வே துறைக்கு சொந்தமான காலியான இடத்தில் நிறுத்தப்பட்டு வந்தது. இதற்கு வாடகையும் வசூலிக்கப்பட்டது. ஆனால் கடந்த 1 வருட காலமாக லாரிகளை நிறுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்தது.

1

இதனால் லாரிகள் அனைத்தும் குட்ஷெட் நுழைவு வாயிலில் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், லாரிகளில் பேட்டரிகள் டயர்கள் உள்ளிட்ட பாகங்கள் திருடப்பட்டு வருவதால் லாரி உரிமையாளர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனையடுத்து இரயில்வே நிர்வாகம் தங்களுக்கு லாரிகள் நிறுத்த அனுமதி வழங்க வேண்டும்‌.  முடிந்த வாடகை தருகிறோம் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2

Leave A Reply

Your email address will not be published.