Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் லாபம் ரூ.129.12 கோடி

1

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் 2020-2021 ஜனவரி-மார்ச் காலாண்டின் லாபமாக ரூ.129.12 கோடி.

2021 மார்ச் 31-ல் நான்காவது காலாண்டின் வரிக்கு பின் நிகர லாபம் ரூ.129.12 கோடி. இது, 2020 இதே காலகட்டத்தில் ரூ.73.55 கோடியாக இருந்தது. வருவாய் ரூ.958.82 கோடியிலிருந்து ரூ.1,507.06 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது.

4

2020-21-ஆவது முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய வரிக்கு பிந்தைய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.273.18 கோடி. இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் ஈட்டிய தனிப்பட்ட லாபம் ரூ.330.55 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

3
2

கணக்கீட்டு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.4,340.86 கோடியிலிருந்து ரூ.4,302.28 கோடியாக குறைந்தது.

இந்த நிதியாண்டில் நிதித் தேவைகளை எதிர்கொள்ள நீண்ட கால கடன் வாங்க கூடிய வகையிலான திட்டங்களுக்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் ரூ.200 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2020-21 நிதி ஆண்டுக்கு இறுதி டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.1.50 வழங்க இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளது..

பங்குச் சந்தையில் 18ம் தேதி நடைபெற்ற வா்த்தகத்தில் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பங்கின் விலை 3.25 சதவீதம் குறைந்து ரூ.1192.15-ஆக இருந்தது.

5

Leave A Reply

Your email address will not be published.