
டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் விற்பனை 30% குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் செய்திக்குறிப்பில் ஏப்ரல் மாதம் 2,38,983 ஆக இருந்த விற்பனை மே மாதம் 1,66,889 ஆக குறைந்து 30% சரிவை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு (2020) மே மாதம் 58,906 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
இருசக்கர வாகன விற்பனை அதேபோல் சென்ற ஆண்டு(2020) 56,218 ஆக இருந்தது. தற்போது ஏப்ரலில் 2,26,193 ஆகவும், மே மாதம் 1,54,416 ஆகவும் குறைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் வாகன விற்பனை சென்ற ஆண்டு 1,25,188 ஆகவும், தற்போது ஏப்ரலில் 1,33,227ஆகவும், மே மாதம் 26,772 ஆகவும் காணப்பட்டது.
ஸ்கூட்டர் விற்பனை இதே போன்று சென்ற ஆண்டு 19,627. தற்போது ஏப்ரலில் 65,213 மே மாதம் 16,120.
மூன்று சக்கர வாகன விற்பனை சென்ற ஆண்டு 12,473., தற்போது ஏப்ரலில் 12,790 மே 2,688.
ஏற்றுமதி சென்ற ஆண்டு 1,14,674. தற்போது ஏப்ரலில் 1,07,674 மே மாதம் 17,707.
உள்நாட்டு சந்தையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மே மாதம் 41,067 இருந்தது. தற்போது ஏப்ரலில் 1,31,386, மே மாதம் 52,084 குறைந்துள்ளது.
