
திருச்சியில் இன்று இலவச அனுமதியுடன் வீரமங்கை வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டின் மையமாக உள்ள திருச்சியில் வீரமங்கை வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி திருச்சி கலை காவேரி நுன்கலைக்கல்லூரி வளாக அரங்கில் இன்று (27/08/2022) சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.


இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறை, கலை பண்பாட்டு துறை, இயல், இசை, நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இணைந்து வழங்கும் ஸ்ரீராம் சர்மாவின் வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத்தில் 60 கலைஞர்கள் தோன்ற 18 ஆம் நூற்றாண்டை கண்முன் கொண்டு வரும் காவியம், மேலும் பிரமாண்டமாக அரங்கேற்றம் இருக்கும் தமிழ் மண்ணின் வீர சரித்திரம் காணவும், வரலாற்று சிறப்பு மிக்க வேலு நாச்சியார் காவிய இசையார்ந்த நடன நாடகத்தினை கண்டுக்களிக்க பொது மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் திரளாக வருகை தந்து கண்டுகளித்திட வேண்டும் என
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறியுள்ளார்.
