Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் வருகின்ற 10ம் தேதி VLB (வேற லெவல் பிசினஸ்) Expo & Exclusive Business Meet 2022

திருச்சியில் வருகின்ற 10ம் தேதி VLB (வேற லெவல் பிசினஸ்) Expo & Exclusive Business Meet 2022

கோவையை தலைமையிடமாகக் கொண்ட VLB எனப்படும் வேற லெவல் பிசினஸ் என்ற வியாபார பொருட்களை விற்பனை செய்யவும், தொழில் வட்டத்தை விரிவுபடுத்தும் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கும் நிறுவனம் சார்பில் திருச்சியில் வரும் (10/09/2022) அன்று கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப கூட்டம் நடைபெறுகிறது.

திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலையில் மாலதி மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் SM Home Crown நிறுவனத்தைச் சார்ந்த லட்சுமி பிரியா கூறும் போது:  பிசினஸ் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், பகுதி நேர வேலை, தொழில் கூட்டணி தேடுவோர், இல்லத்தரசிகள், மாணவ மாணவிகள் இன்னும் தொழில் முனைவோர் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த கூட்டம் அமையும். பல வெற்றியாளர்களின் பேச்சைக் கேட்கவும், சந்திக்கவும் இது ஒரு அறிய வாய்ப்பாகும்.

 

இலவச அனுமதியுடன் நடக்கும் இந்த கண்காட்சியில் தங்கள் வியாபாரம் குறித்து மேடையில் அறிமுக விளம்பரம் செய்து கொள்ள விரும்புகிறவர்கள் ரூ. 499 செலுத்தி தங்கள் நிறுவனம் குறித்து விளக்கிப் பேசி பயன்பெறலாம்.

மாணவர்களுக்கு சிறப்பு கட்டணமாக ரூ.299 போதுமானது. இதில் பதிவு செய்து கொள்பவர்களுக்கு 3 நாட்கள் இலவச Digital marketing பயிற்சி வழங்கப்படுகிறது. முன்பதிவு அவசியம் என்றும் பதிவு செய்தவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்த கூடுதல் விபரங்கள் அல்லது முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் 96599 40016 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Leave A Reply

Your email address will not be published.