Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் VLB (வேற லெவல் பிசினஸ்) Expo & Exclusive Business Meet 

1

திருச்சியில் VLB (வேற லெவல் பிசினஸ்) Expo & Exclusive Business Meet 

கோவையை தலைமையிடமாகக் கொண்ட VLB எனப்படும் வேற லெவல் பிசினஸ் என்ற வியாபார பொருட்களை விற்பனை செய்யவும், தொழில் வட்டத்தை விரிவுபடுத்தும் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கும் நிறுவனம் சார்பில் திருச்சியில் (10/09/2022) அன்று கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப கூட்டம் நடைபெற்றது.

4

3

திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலையில் மாலதி மஹாலில் நடைபெற்ற இக்கண்காட்சி கருத்தரங்கில் திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, பெரம்பலூர், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகள் குறித்து விற்பனை கண்காட்சிகள் வைத்து இருந்தனர்.

2

SM Home Crown நிறுவனத்தைச் சார்ந்த லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் VLB (வேற லெவல் பிசினஸ்) அமைப்பின் நிறுவனர் அசோக் குமார், ட்ரீம் கிட்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் தாளாளர் மீனாட்சி சுப்பிரமணியம், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி ஸ்டார்ஸ் தலைவர் வள்ளியம்மை, தொலைக்காட்சி நிருபர் ஜான் கண்ணா உட்பட பலர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பயனுள்ள ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற, தொழில்முனைவோர் தங்களது நிறுவன தயாரிப்புகள் குறித்து எடுத்துக்கூறி, தங்களது விற்பனையை பெருக்கி கொள்ளும் ஒரு வாய்ப்பை பெற்றனர்.

இதில், பிசினஸ் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், பகுதி நேர வேலை, தொழில் கூட்டணி தேடுவோர், இல்லத்தரசிகள், மாணவ மாணவிகள், இளம் தொழில் முனைவோர் என பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த கூட்டம் அமைந்தது. 

 

 

5

Leave A Reply

Your email address will not be published.