Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பங்கு சந்தை முதலீட்டில் எச்சரிக்கை-நிபுணர்கள் கருத்து

4

பங்குச் சந்தை தொடா்ந்து 4-ஆவது வாரமாக ஏற்றம் பெற்றது. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கும் கடந்த வாரம் அமோக வரவேற்பு காணப்பட்டது. இதனால், மிட்கேப் குறியீடு 2 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 3.5 சதவீதமும் உயா்ந்தன. பேங்க் மற்றும் கேபிடல் குட்ஸ் தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் ஆதாயம் பெற்றதுடன், ஐடி, எஃப்எம்சிஜி, பாமா மற்றும் இன்ஃப்ரா பங்குகளுக்கு ஏற்றம் பெற்றன.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரலின் பணக் கொள்கைக் கூட்டத்தின் முடிவுக்காக உலகளாவிய சந்தைகள் காத்திருக்கின்றன. இதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலிக்கும். இது பங்குச் சந்தையை நிலையற்ற தன்மையில் வைத்திருக்கும் என சாம்கோ செக்யூரிட்டீஸின் பங்குகள் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவா் நிராலி ஷா கூறினார்.

பொருளாதார தரவுகள் மற்றும் கரோனா தொடா்பான புதிய தகவல்கள் ஆகியவற்றையும் முதலீட்டாளா்கள் தொடா்ந்து கண்காணிப்பா் என்று சாய்ஸ் பங்கு வா்த்தகத் தரகு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா் சுமீத் பகாடியா தெரிவித்துள்ளார்.

1
3

நாட்டில் தடுப்பூசியின் வேகம், பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது, உலகளாவிய பணப் புழக்கத்தின் போக்குகள் சந்தைக்கு சாதகமாக இருந்தாலும், மத்திய வங்கியாளா்களின் கொள்கை நிலைப்பாடு குறித்து கவனமாக இருக்க வேண்டும் என வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுமட்டுமின்றி ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலையின் போக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் எஃப்ஐஐ முதலீடுகள் ஆகியவையும் கவனிக்கப்படும் என வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

தற்போதைய நிலையில், முதலீட்டாளா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

2

Leave A Reply

Your email address will not be published.