Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! 

1

திருச்சியில் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! 

மேட்டூர் அணையிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முக்கொம்பு மேலணையில் வரும் நீரின் அளவும் அதிகரிக்கும் என்பதால், நேற்று முக்கொம்பு மேலணையிலிருந்து நேற்று இரவு 8 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 5  ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

4
2

இதனையடுத்து, காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

3

காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் அவ்வப்போது நீர்வரத்து அறிந்து கொண்டு பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், காவிரி கொள்ளிட நீர்நிலைகளில் மீன்பிடிக்கவோ அல்லது பொழுதுபோக்கிற்கோ செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்களில் நின்று கொண்டு செல்பி எடுக்க அனுமதி இல்லை என கூறியுள்ளார்.

5

Leave A Reply

Your email address will not be published.