Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வீணாகும் நெல் மூட்டைகள்! விரக்தியில் விவசாயிகள்!

4

வீணாகும் நெல் மூட்டைகள்! விரக்தியில் விவசாயிகள்!

விவசாயிகள் பருவக்காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வார்கள். இந்த பருவத்திற்கான நெற்பயிர்களை கடந்த 8-ம் தேதி முதல் வழங்கலாம் என அரசு அறிவித்திருந்தது.

3

இதனையடுத்து, முசிறி பகுதியில் நெல் விளைவித்தவர்கள் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 5 நாட்களுக்கு முன்பே காய்ந்த பதத்தில் நெல்லை ஒப்படைத்தனர்.

1

ஆனால் கொள்முதல் நிலையங்களில் தேவையான சாக்குகள் இல்லாத காரணத்தினாலும் மேலும் சாக்குகள் ஓட்டையாக இருப்பதால் நெல்மணிகள் வெயிலில் காய்ந்து போகின்றது இதனால் மூட்டைக்கு  2 கிலோ வரை எடை குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

2

Leave A Reply

Your email address will not be published.