Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் கட்டிட பணியில் உயிரிழந்த தொழிலாளி! 

1

திருச்சியில் கட்டிட பணியில் உயிரிழந்த தொழிலாளி! 

திருச்சி பிராட்டியூர் மேலஅரிஜன தெருவை சேர்ந்தவர் கருப்பையா(வயது 56). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கே.கே.நகர் பகுதியில் கட்டிட  பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,  அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியில் உரசி மின்சாரம் தாக்கி அவர் மேலே இருந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

4
2

இந்நிலையில்,  திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த கருப்பையாவின் ருப்பையாவின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மேலும், உயர் மின்னழுத்த கம்பி அருகே கட்டிடம் கட்ட அனுமதி அளித்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கட்டிட உரிமையாளரை கைது செய்ய வேண்டும்  என கூறி உடலை வாங்க மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

3

இதுகுறித்து, தகவல் அறிந்த வந்த போலீஸ் உதவி கமிஷனர் ராஜூ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

5

Leave A Reply

Your email address will not be published.