எங்களை பற்றி
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறும் வர்த்தகத்தை குறுக்கும் நெடுக்குமாய் ஆய்ந்தறிந்து வர்த்தகர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், புதிய தொழில் வாய்ப்புகளை தேடுவோர்க்கும் அரிய பல செய்திகளை தரும் நோக்கத்துடன் ‘பிசினஸ் திருச்சி“ என்ற பெயருடன் பத்திரிக்கை தளத்தில் நாங்களும் ஒருவராக களம் இறங்கியுள்ளோம்.
திருச்சியில் கருவேப்பிலை விற்பனை, கடலைமிட்டாய் தயாரிப்பு முதல் கடல் கடந்து நடைபெறும் வாணிபத்தையும், அதில் உள்ள வர்த்தக வாய்ப்புகளையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.
ஜி.எஸ்.டி., வீட்டுக்கடன் குறித்து ஆர்.பி.ஐ. என்ன சொல்கிறது. ஷேர்மார்க்கெட், செபி, பிட்காயின் என இப்படியான பிஸ்னஸ் பார்வையுடன் மட்டுமே பயணப்படாமல் அவற்றை யெல்லாம் விருந்தில் பரிமாறப்படும் ஊறுகாய் போல் வைப்பதோடு, உங்களுக்கான முழு விருந்தாக நாங்கள் தர நினைப்பது திருச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தக வாய்ப்புகள், புதிய புதிய சிந்தனைகளுடன் களமிறங்கும் விற்பனையாளர்களின் பாதைகள், வெற்றி பெற்றோரின் தாரக மந்திரங்கள் – குறிப்பாக வர்த்தகத்தில் எங்கெல்லாம் நான் தவறு செய்தேன், ஏன் தோற்றேன் என தோற்று மீண்டெழுந்தவர்கள் தங்கள் அனுபவங்களை உங்களுடன் பரிமாறி புதியவர்களுக்கு ஒரு எச்சரிக்கை பாதையை அமைத்துக் கொடுக்கவும் முனைந்திருக்கிறோம்.
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற”
– என்ற குறளிற்கு ஏற்ப மனஉறுதியுடன்
பத்திரிக்கை உலகிற்குள் நீங்கள் எங்கள் கரம் பற்றி அழைத்துச் செல்வீர்கள் என்ற மேலும் மேலுமான மனஉறுதியுடன் பயணத்தை தொடங்கியுள்ளோம்.