முதுமை கால பென்ஷன் மாதம் ரூ.3,000 பெற ரூ.55 சேமித்தால் போதும்
முதுமை காலத்தில் ஒரு வேளை உணவிற்கு வாரிசுகளின் கையை எதிர்பார்க்கும் அவலநிலைக்கு ஆளாகாமல் இருக்க இளமை காலத்தில் ஒரு சிறு தொகையை சேமிப்பிற்கு ஒதுக்கினால் அதுவே உங்களை சுகமாக வாழ வைக்கும். அத்தகையதொரு வாய்ப்பை வழங்குகிறது மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம்.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.55 சேமித்து வந்தால், கடைசி காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்தியர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். அரசு பொது சேவை மையங்களில் இந்த திட்டத்தை தொடங்க முடியும்.
கணக்கு தொடங்கிய பிறகு அட்டையை வைத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 55 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.200 வரை சேமிக்கலாம். மாதம் ரூ.55 வீதம் 42 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் சேமிக்க வேண்டும். அதன்படி உங்களது முதலீடு பணம் ரூ.27,720 ஆக இருக்கும். 60 வயதை தாண்டிய உடன் பென்ஷன் கிடைக்கும்.மாதாந்திரப் பென்ஷனுக்கு பதிலாக வருடாந்திர பென்சனாகவும் பெற்றுக் கொள்ளலாம்.