ரூ.25 லட்சம் வாரி வழங்கும் பெண்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம்
இந்திய அஞ்சல்துறையில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தான் இத்தகைய சிறப்பு இருக்கிறது. பெண்குழந்தைகளின் சேமிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த திட்டத்தின் காலம் 15 வருடமாகும். வட்டி விகிதம் 7.6 தரப்படுகிறது.
மாதந்தோறும் ரூ.5000 வீதம் 15 வருடத்திற்கு செலுத்தப்படும் தொகையில் முதிர்வு தொகையாக ரூ.25.5 லட்சமும், ரூ.3000த்திற்கு 15.3 லட்சமும், ரு.2000த்திற்கு 10.2 லட்சமும், ரூ.1000த்திற்கு ரூ5.10 லட்சமும் முதிர்வு தொகையாக வழங்கப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான திட்டம் இது. 18 வயதில் கல்வித் தொகை 50% பெறலாம். முதிர்வுத்தொகை 21 வருடத்திற்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத் தில் சேர பிறப்புச்சான்றிதழ், பெற்றோரின் ஆதார்நகல், போட்டோ 2 தேவையானது.