தமிழ்நாடு, கேரளா, சண்டிகர், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் அக்.30 வரை 204.59 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 21.16 சதவீதமாகும். இந்த கொள்முதல் மூலம், சுமார் 17.23 லட்சம் விவசாயிகள், ரூ.38,627.46 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்று பயனடைந்துள்ளனர்.
ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த 31ம் தேதி கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் 3961 பேரிடம் இருந்து 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய், ரூ.52.40 கோடி குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.