நாளை சுபமுகூர்த்தத் தினம் உள்ள நிலையில் தோவாளை மலர் சந்தையில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.5000க்கு விற்பனையாவதால் மக்கள் அதிர்ச்சி.

தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. மற்ற மாவட்ட மலர் சந்தைகளை ஒப்பிடுகையில் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை குறைவாக இருக்கும். இங்கு பூக்களின் வரவு, தேவை, விற்பனையைப் பொறுத்து விலைகளில் அடிக்கடி மாற்றம் ஏற்படும்.


