மத்திய அரசு வழங்கும் 30 லட்சம்… பொதுமக்களே உஷார்…
தற்போது சமூக வலைதளங்களில் மத்திய அரசு பொதுமக்களுக்கு 30 லட்சம் ரூபாய் தருவதாக தகவல் பரவி வருகின்றது.
இத்தகவலை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பத்திரிக்கை நிறுவனமான (PIB) கண்டறிந்து உண்மையை வெளியிட்டுள்ளது.
அதில், மத்திய அரசின் சார்பில் ரூ.30 லட்சம் வழங்குவதாக பரவி வரும் செய்தி போலியானது. இதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் மத்திய அரசு வெளியிடவில்லை என தெரிவித்துள்ளர்.
ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் நபர்கள், இது போன்ற போலியான தகவல்களுடன் ஒரு லிங்கையை கொடுத்து, அதை கிளிக் செய்த உடன் தனிநபரின் விபரங்கள் மற்றும் பணத்தை திருடுகின்றனர். ஆகையால் பொதுமக்கள் இதுபோன்ற போலியான தகவல்களை நம்பாமல் தவிர்ப்பது நல்லது.