2022 ம் ஆண்டு பயணிகள் பிரிவு வாயிலான வருவாய் 76 சதவீதம்! இந்தியன் ரயில்வே அறிவிப்பு
இந்த நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் (ஏப்ரல் முதல் நவம்பர்) பயணிகள் பிரிவு வாயிலான வருவாய் 76 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் பயணிகள் பிரிவு வாயிலான மொத்த தோரயமான வருவாய் ரூ.43,324 கோடியாக இருந்தது.
இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.24,631 கோடியாக இருந்தது என இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.