Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி புதிய பிரம்மாண்ட திருமண மஹால் திறப்பு !

திருச்சி வயலூரில் புதிய பிரம்மாண்ட திருமண மஹால்திறப்பு. – திருச்சி வயலூர் முருகன் கோவில் செல்லும் பிரதான சாலையில் தி ராயல் மஹால் (THE ROYAL MAHAL ) ராயல் கேலக்ஸி மஹால் ( ROYAL GALAXY MAHAL) என்ற புதிய பிரமாண்டமான திருமண மஹால் திறக்கப்பட்டது . இதற்காக திறப்பு விழா சலுகையாக முதல் நூறு முன்பதிவிற்கு 50 சதவீதம் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

THE ROYAL MAHAL
THE ROYAL MAHAL

தி ராயல் மஹால் வளாகத்தினை கல்யாணமாலை புகழ் மோகன் மற்றும் உரிமையாளர்கள் N. வீரராகவப் பெருமாள், V. சுகன்யா S. சரவண பாண்டியன் – வனஜா M. முகமது ஹனிப் M.ஷரி.°.பா. B. கிரிதரன் – G. சக்திகௌரி, ஆகியோர் திறந்து வைத்தனர். தி ராயல் மஹால் மண்டபம் திறந்து வைத்தவர் சௌந்தர் ராஜன்,( AGTC, குவைத்,) ராயல் கேலக்ஸி மஹாலினை ரமேஷ் ,வயலூர் அறங்காவலர் குழு தலைவர், ராயல் மெஜஸ்டிக் ஹாலை ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

THE ROYAL MAHAL
THE ROYAL MAHAL

இந்த மஹால் குறித்து நிர்வாகத்தினர் கூறும் பொழுது , முற்றிலும் குளிரூட்டப்பட்ட தி ராயல் மஹால் 900 இருக்கைகள் கொண்டது. 1500 நபர்கள் வரை பயன்படுத்தி கொள்ளலாம், 250 பேர்கள் ஒரே நேரத்தில் உணவருந்து Dining hall வசதி, 150 கார்கள் மற்றும் 250 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி, இரண்டு புறமும் லிப்ட், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்த வீல் சேர், சமையலுக்கு RO வாட்டர் மட்டுமல்லாமல் ஆடியோ,வீடியோ உள்கட்டமைப்பு ( Tv, Projector ) தேவைப்படுவோருக்கு குறைந்த கட்டணத்தில் தரும் ஏற்பாடு போன்ற பல்வேறு வசதிகளும் கண்கவர் இன்டீரியர் exterior வசதியுடன் உருவாக்கி உள்ளோம் .

THE ROYAL MAHAL
THE ROYAL MAHAL

மேலும் 300 இருக்கை வசதிகள் 500 பேர் பயன்படுத்தும் வசதி 100 பேர் உணவருந்தும் வசதி கொண்ட ராயல் கேலக்ஸி மஹால் மற்றும் Corporate Events நடத்தும் வசதியும் உள்ளது .தனித்தனி indoor மற்றும் outdoor கிச்சன்கள். சைவ, அசைவ உணவுகள் தயாரிக்க தனித்தனி பாத்திரங்கள். அவுட்டோர் buffet டைனிங் மற்றும் கேட்டரிங் சர்வீஸ், தனி EB, ஜெனரேட்டர் வசதி, மணமகன், மணமகள் அறைகள் நீங்கலாக உறவினர்கள் தங்குவதற்கு என்ற நான்கு நட்சத்திர வசதிகளுடன் கூடிய 10 அறைகள் என மிக நேர்த்தியாக திட்டமிட்டு இயற்கை சுழலுடன் கூடிய திருமண மண்டபங்களை உருவாக்கி உள்ளோம்.

THE ROYAL MAHAL
THE ROYAL MAHAL

இங்கு நடைபெறும் திருமணங்களில் பங்கேற்பதே ஒரு பரவசமான மற்றும் தனித்துவமான அனுபவமாக அமையும் என்று தெரிவித்தனர். திறப்பு விழாவில் உலகப்புகழ் லஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெற்றது.

THE ROYAL MAHAL
THE ROYAL MAHAL

இத் திறப்பு விழாவில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

-சந்திரமோகன்

Leave A Reply

Your email address will not be published.