நவம்பர் 30, 2025 UPS தேர்வு, DLC சமர்ப்பிப்பு, TDS, வருமானவரி தாக்கல், 3CEAA படிவம் உள்ளிட்ட முக்கிய டெட்லைன்கள் நிதி அமைச்சகம் மற்றும் அரசு அறிவுறுத்தியுள்ளன.

நவம்பர் மாதம் முடிவடைய இருக்கும் இந்த சமயத்தில் அபராதங்களை தவிர்ப்பதற்கு ஒரு சில டெட்லைன்களை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவற்றை தவறவிட்டால் அபராதங்கள், சேவைகள் நிறுத்தம் அல்லது பலன்கள் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்படலாம். வருடாந்திர ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அல்லது OPS இல் இருந்து UPS டிரான்ஸ்ஃபர் செயல்முறையை நிறைவு செய்வது போன்றவற்றிற்கு நவம்பர் 30ஆம் கடைசி தேதி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நவம்பர் 30, 2025க்குள் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய சில முக்கியமான வேலைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
UPS டெட்லைன்: யூனிஃபைடு பென்ஷன் திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு நிதி அமைச்சகம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பர் 30, 2025 வரை இறுதி தேதியை அறிவித்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 30ஆம் தேதி டெட்லைனாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. UPS திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்களுடைய அடிப்படை சம்பளம் மற்றும் டியர்னஸ் அளவன்சில் 10 சதவீதத்தை பங்களிப்பார்கள். அதே சமயத்தில் அரசு 18.5 சதவீதத்தை பங்களிக்கும். இது பழைய பென்ஷன் திட்டத்தோடு வேறுபட்டதாக அமைகிறது.


