பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு “அவ்வையார் விருது” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் மகளிரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருதுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:
(https://awards.tn.gov.in). இவ்விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.12.2025 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கருத்துரு கையேட்டில் (Booklet) இணைக்கப்பட வேண்டியவை:
பொருளடக்கம் மற்றும் பக்க எண் (Index). இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் சுய விவர தரவு (Bio Data) சுயசரிதை(ம) Passport size photos-2, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை கடிதம், மாவட்ட சமூகநல அலுவலரின் பரிந்துரை கடிதம், ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (Bulletin points) தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலம் (Verdana), தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் விருதின் பெயர் / யாரிடமிருந்து பெறப்பட்டது / பெற்ற வருடம்/விருது பெற்றதிற்கான காரணம்), கையேட்டில் விருது பெற்ற புகைப்படம், சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் மற்றும் பக்கங்களுக்கு குறிப்பு வைக்கவும், சேவை பற்றிய செயல் முறை விளக்கம் புகைப்படங்களுடன், சேவை பாராட்டிய பத்திரிக்கை செய்தி தொகுப்பு (ம) சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின்/ சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விபரம், தொண்டு நிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை, சமூக பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, இணைப்பு -படிவம் தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலம் (Verdana) முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், கையேடு (Booklet) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.
மேற்காணும் விருதுகள் பெற விண்ணப்பிக்க விரும்புவோர் அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைத்து கருத்துருவாக தயார் செய்து 31.12.2025 க்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கருத்துரு குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் அலுவலக தொலைபேசி எண்: 0431-213796 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சிராப்பள்ளி வே.சரவணன்,இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.



