இன்றைய (டிசம்பர் 20) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும்நிலையில், நேற்று முன் தினம் முதல் முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

நேற்று சற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. இருந்தாலும் ரூ.1 லட்சத்திற்கு கீழே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,380க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.99,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,400க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,345க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.226க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



