தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றன. இதற்கிடையே, திருமண சீசன் நெருங்கி வருவதால் நகை வாங்க முடியாமல் நடுத்தர மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதி மற்றும் 2026 புத்தாண்டில் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
வரும் மாதங்களில் தங்கத்தின் விலையில் மற்றொரு குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. லட்சுமி டயமண்ட்ஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சேதன் மேத்தா, ‘CNBC TV 18’ உடன் பேசுகையில், 2026 புத்தாண்டில் தங்கத்தின் விலை குறித்து கணித்தார். இந்த ஆண்டு, முதலீட்டு தங்க கொள்முதல், நகை வாங்குதல்களை விட வலுவாக உள்ளது என்று மேத்தா விளக்கினார்.



