2025 ஆம் ஆண்டு தங்கம் விலை உச்சம் தொட்டு வந்த நிலையில் 2026 புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை குறைந்துள்ளது.
2025-ஆம் ஆண்டு தங்கத்தின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்து பல புதிய உச்சங்களைத் தொட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை உயர்ந்தது.
அதன் படி நேற்று (டிசம்பர் 31) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 குறைந்து ஒரு கிராம் ரூ.12,480க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து ஒரு சவரன் ரூ..99,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டு குறைந்துள்ளது.
அதன்படி 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,440க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.99,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.10,375க்கும் சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.83,00க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.256க்கும், ஒரு கிலோ ரூ.2,56,000க்கும் விற்பனையாகிறது.



